தேசத்துரோகம் யும் விக்கி! - அஸ்கிரிய பீடம்

சிங்கள பெளத்த மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டி விடும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் நாரங்கனாவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

சி.வி விக்கினேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள பெளத்த எதிர்ப்பு கருத்துக்களை கூறிவரும் நபராவார்.

ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை விடவும் விக்கினேஸ்வரன் கூறும் கருத்துக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களாகவே அமைந்து வருகின்றது.

அண்மையில் மஹாவம்ச வரலாற்றை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார்.

இது தேசத்துரோக கருத்தாக நாம் கருதுகின்றோம்.

அத்துடன் சிங்கள பெளத்த மக்களை கோபப்படுத்தும் வகையில் அவரது அரசியல் நோக்கத்துக்காக செய்துகொண்ட கருத்தாக நாம் நினைக்கின்றோம்.

ஒரு நாட்டின் வரலாற்றை அடையாளப்படுத்துவது அந்நாட்டின் தொல்பொருள் வரலாறுகளை கொண்டேயாகும்.

இலங்கையின் வரலாறுகளும் பெளத்த சிங்கள தொன்மையும் எமது தொல்பொருளியல் சான்றுகள் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் அவற்றை விமர்சித்து அரசியல் செய்வது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அரசாங்கம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here