எமது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ் நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தேர்வாகும் என்றும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் சி.வி.விக்­னேஸ்­வரன், தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­டைய தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­வந்­துள்ள நிலையில் தங்கள் கட்­சியின் நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்த முடி­யுமா என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

தென்­னி­லங்­கையின் இரு பிர­தான கூட்­டுக்­கட்­சி­களின் சிங்­கள வேட்­பா­ளர்கள் எமது 13 அம்சக் கோரிக்­கை­களை அடிப்­ப­டை­யாக வைத்து 5 கட்­சி­க­ளுடன் கூட் ­டாகப் பேசு­வ­தற்குத் தயா­ராக இருக்­க­வில்லை என்­ப­துடன் தேர்தல் விஞ்­ஞாப­னங்­களை மாத்­தி­ரமே வெளி­யிட்­டுள்­ளார் கள் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் பொரு­ளா­தார விட­யங்கள் குறித்தே குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்­றிற்குத் தீர்­வு­காணும் போது மற்­றைய பிரச்­சி­னை­களைத் தீர்க்­கலாம் என்ற தொனி அவரின் விஞ்­ஞா­ப­னத்தில் வெளிப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடி­கி­றது. இனப் பிரச்­சினை பற்றி எந்த ஒரு தீர்­வையும் முன்­வைக்க அவர் முனை­ய­வில்லை.

இதே­வேளை சஜித் பிரே­ம­தாச தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் பிள­வு­ப­டாத மற்றும் பிரிக்க முடி­யாத இலங்­கைக்குள் அதி­க­பட்ச அதி­காரப் பகிர்வு அமுல்­ப­டுத்­தப்­படும் என்று கூறி­யுள்ளார். ஆனால் அதற்கு முன்னர் அதே பகு­தியில் பக்கம் 16 இல் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது. நாம் எம் தாய் நாட்டின் ஐக்­கியம், பிராந்­திய ஒரு­மைப்­பாடு, இறைமை மற்றும் அர­சியற் சுதந்­திரம் என்­ப­வற்றைப் பாது­காப்போம். அரச முடி­வெ­டுப்பை மக்­க­ளுக்கு நெருக்­க­மாக கொண்டு வருவோம் என்று. இது சிங்­களப் பிர­தியில் பக்கம் 16 இல் கூறப்­பட்­டுள்­ளது.

ஆங்­கி­லத்­திலும் தமி­ழிலும் ஐக்­கியம் (Unity) என்ற சொல் பாவிக்­கப்­பட சிங்­க­ளத்தில் எக்­சத்­வய என்ற சொல் பாவிக்­கப்­பட்­டுள்­ளது. ஏகீ­யத்­வய என்ற சொல் ஒற்றைத் தன்­மையை வெளிக்­காட்­டு­கின்­றது. அதா­வது அச்சொல் ஒற்­றை­யாட்­சிக்கு வழி­ய­மைக்கும் ஒரு சொல். உண்­மையில் Unity ஐக்­கியம் என்ற சொற்­க­ளுக்குப் பாவிக்­கப்­பட வேண்­டிய சிங்­களச் சொல் எக்­சத்­வய என்­பது. அத­னால்த்தான் ஐக்­கிய தேசி­யக்­கட்சி எக்சத் ஜாதிக ப­க்ஷய என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. ஏகிய ஜாதிக ப­க்ஷய என்று அழைக்­கப்­ப­டு­வ­தில்லை. பலரை ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தாகக் குறிப்­பிட்டே ஐக்­கிய தேசி­யக்­கட்சி என்று தமிழில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஒற்றைத் தேசியக் கட்சி என்று கூறு­வ­தில்லை. ஆனால் ஆங்­கில தமிழ் பிர­தி­களில் Unity ஐக்­கியம் என்ற ஒரு­பொருட் சொற்­களைப் பாவித்­து­விட்டு சிங்­க­ளத்தில் எக்­சத்­வய என்ற அதே கருத்­து­கொண்ட சொல்லைப் பாவிக்­காமல் ஏகீ­யத்­வய என்ற சொல் ஏன் பாவிக்­கப்­பட்­டுள்­ளது? ஏகீ­யத்­வய என்ற சொல் சிங்­கள மொழியில் தகுந்த கார­ணத்­துடன் தான் பாவிக்­கப்­பட்­டதோ என்று எண்ண வேண்­டி­யுள்­ளது.

அதே­வேளை ஒப்­பீட்­ட­ளவில் சஜித் பிரே­ம­தா­ஸ­வினால் வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­பனம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னைகள் குறி த்து சில நல்ல விட­யங்­களை உள்­ள­டக்­கி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆயினும் தமிழ் மக்­க­ளு­டைய அடிப்­படைப் பிரச்­ச­னை­க­ளான சுய­நிர்­ணய உரிமை, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி, எமது தேசிய இறைமை ஆகி­யவை குறித்து அவ­ரது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எதுவும் வெளிப்­ப­டை­யாகத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. மாறாக அவற்­றிற்கு இடம்­கொ­டுக்­காத வகையில் ஏகீ­யத்­வய என்ற சொல்லைப் பாவித்­துள்ளார். அப்­ப­டி­யானால் நாம் அர­சியல் ரீதி­யாகக் கேட்­கப்­போகும் எதற்கும் இட­ம­ளிக்­க­மாட்டேன் என்­பது தான் அவரின் கருத்து. அதே­ச­மயம் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை போன்ற கடும்­போக்கு விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது பௌத்த அடிப்­படை வாதத்­தி­லா­லான ஒரு ஆட்­சியை உரு­வாக்கி விடுமோ என்­கின்ற அச்­சத்தை எமக்கு ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இன்னும் பல குறை­பா­டுகள் அவ­ரது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் காணப்­ப­டுகின்­ றன. அவற்றுள் ஒன்­றுதான் 1992 ஆம் ஆண்டின் 58ஆவது இலக்க சட்­டத்தை நீக்க முன்­வ­ராமை. 1987 தொடக்கம் அர­சாங்க அதி­பர்கள், மாவட்ட செய­லர்கள், கிராம சேவ­கர்கள் போன்றோர் மாகாண ஆட்­சிக்குக் கீழ் வந்­தனர். இவர்­களை மத்­தியின் அதி­கா­ரத்­தினுள் கொண்டு வந்­தது மேற்­படி சட்டம். இப்­போது மத்­திக்கு ஆத­ர­வாக அவர்­களை வைத்­துக்­கொண்டு மாகாண முக­வர்­க­ளா­கவும் நிய­மிக்க எத்­த­னிக்­கின்­றார்கள். மாகாண அரச சேவைக்குள் அந்த அலு­வலர்­களைக் கொண்டு வரப்­போ­வ­தாகக் கூற­வில்லை. ஆகவே இந்தத் தேர்தல் விஞ்­ஞா­பனம் தமிழ் மக்­களைப் பொறுத்த வரையில் திருப்­தி­க­ர­மான ஒன்­றாக அமை­ய­வில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த லின் போது வெளிப்­ப­டை­யாக எந்த ஒரு உறுதிமொழி­யையும் பெற்றுக்கொள்­ளாமல் தமிழ் மக்கள் வாக்­க­ளித்து கடை­சியில் ஏமாற்­றத்­தையே பெற்றுக் கொண்­டனர். இன்றும் எமது அடிப்­படைக் கோரிக்­கை­களை ஏற்­காத நிலையே தொடர்­கின்­றது. இதைத்தான் நான் தொடர்ந்து கூறி­வ­ரு­கின்றேன். இவ்­வா­றான நிலை நீடித்தால் காலக்­கி­ர­மத்தில் தமிழ் மக்கள் தங்கள் மாகா­ணங்­களில் சிறு­பான்­மை­யி­ன­ராக ஆகி­வி­டுவர். அதற்கு ஏற்­ற­வாறு எம் மக்­களுள் பலர் வெளி­நாட்­டுக்கு செல்­வ­தையே குறிக்­கோ­ளாக வைத்­துள்­ளனர்.

எனவே மீண்டும் ஒரு முறை வெளிப்­படைத் தன்மை இல்­லாத தேர்தல் விஞ்­ஞா­ பனம் ஒன்றை அதுவும் கர­வாகச் சிங்­கள பிர­தி­க­ளிலும் ஆங்­கில, தமிழ்ப் பிர­தி­க­ளிலும் வித்­தி­யா­சங்­களை உட்­பு­குத்­தி­யி­ருக்கும் ஒன்றை நம்பி எவ்­வாறு எமது மக் கள் ஆத­ரவு அளிக்க முடியும் என்ற கேள்வி எழு­கின்­றது.

ஆகவே நாம் தீர்­மா­னித்த எமது கட்­சி யின் முன்­னைய நிலைப்­பாட்­டையே மீண் டும் வலியுறுத்துகின்றோம். அதாவது எந்த முக்கிய கட்சி, கூட்டின் சிங்கள வேட் பாளருக்கும் வாக்களிக்கும்படி எமது விர லால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, ஜனநாயக ரீதியாகத் தேர் தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை நாம் மதிக்கின் றோம்.

அவ்வுரித்தை எம்மக்கள் பயன்படு த்த வேண்டும். எமது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ் நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகின் றோம். யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தேர்வாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here