அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன்
அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.
ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே
அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் நடந்த மந்திரிசபை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.